எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது.. அனுபமா பரமேஸ்வரன் அறிவிப்பால் திரையுலகில் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Monday,May 29 2023]

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’பிரேமம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அனுபமா பரமேஸ்வரன் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தனுஷ் நடித்த ’கொடி’ அதர்வா நடித்த ’தள்ளி போகாதே’ உள்பட ஒரு சில தமிழ்ப் படங்களிலும், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் ஜெயம் ரவியின் ’சைரன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் பக்கத்திற்கு 13 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தனது கையில் பிளாஸ்டிக் கவரை மோதிரம் போல் கட்டிக் கொண்டு தனக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக காமெடி செய்துள்ளார். இந்த காமெடியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

அனுபமா பரமேஸ்வரனின் இந்த பதிவு முழுக்க முழுக்க காமெடி பதிவு என்றும் அவருக்கு இன்னும் நிச்சயதார்த்தம் ஆகவில்லை என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

More News

ஸ்டார் ஹோட்டலில் பிச்சைக்காரர்களுக்கு விருந்து வைத்த முக்கிய இயக்குநர்… நெகிழ்ச்சி வீடியோ!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருந்து தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் விஜய் ஆண்டனி

இதுதான் கடைசி போட்டி… சிஎஸ்கே முக்கிய வீரர் ஓய்வை அறிவித்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இன்று நடைபெறவுள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் ஒருவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு

ஷோபாவில் நிர்வாண போஸ்… பிரபல நடிகரின் புகைப்படத்தால் இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் நடிகை மலைக்கா அரோரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாலிவுட் இளம் நடிகர் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

IIFA 2023 வழங்கிய விருதுகள்… முழு தொகுப்பு!

ஆண்டுதோறும் நடைபெறும் ஐஐஎஃப்ஏ இந்தியத் திரைப்பட அகாடமி விருதுகள் இந்த ஆண்டு அபுதாயில் உள்ள யாஸ் தீவில் 26 , 27 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

என்னால் 150 வயது வரை உயிர் வாழ முடியும், என்னை முதல்வராக்கினால் அந்த ரகசியத்தை சொல்வேன்: பிரபல தமிழ் நடிகர்

என்னால் 150 வயது வரை உயிருடன் இருக்க முடியும் என்றும் என்னை முதலமைச்சராக அந்த ரகசியத்தை சொல்வேன் என்றும் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.