close
Choose your channels

அருண்விஜய் டுவிட்டால் பரபரப்பான மாஸ் நடிகரின் ரசிகர்கள்

Sunday, September 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நடிகர் அருண்விஜய் தற்போது கோலிவுட்டில் தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்துள்ளார். அவர் நடித்த 'தடம்' மற்றும் 'செக்க சிவந்த வானம்' படங்கள் ரிலீஸ் ஆனதும் அவர் பெயர் முன்னணி நடிகர்களின் பட்டியலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிலமணி நேரத்திற்கு முன் அருண்விஜய் டுவிட்டர் பக்கத்தில், 'யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாம போச்சு. தமிழ் ஆடியன்ஸுக்க்கு தெரியும், திறமைக்கு மட்டும் மதிப்பு கொடுப்பார்கள்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. நேற்று ஒரு மாஸ் நடிகரின் டிரைலர் வெளிவந்ததால் அவருடைய ரசிகர்கள் மாஸ் காட்டியதற்காகவே அருண்விஜய் இந்த டுவீட்டை பதிவு செய்ததாக பலர் கமெண்ட் அளித்தனர். இதனால் டுவிட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகர் அருண்விஜய் இன்னொரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில், 'என்னுடைய டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் தான் அது சரிசெய்யப்பட்டது. தயவு செய்து இதற்கு முன்னர் பதிவான டுவீட்டுக்களை கண்டு கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். எனவே அவரது பக்கத்தில் பதிவான முந்தைய டுவீட் ஹேக்கர்களின் கைவரிசை என கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.