முதலமைச்சர் பதவியை குறி வைக்கின்றாரா தனுஷ்?

  • IndiaGlitz, [Monday,May 02 2022]

நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அவர் முதலமைச்சர் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

கடந்த 2010ஆம் ஆண்டு சேகர் கம்முலா இயக்கத்தில் ராணா நடிப்பில் உருவான திரைப்படம் ’லீடர்’. நோய்வாய்ப்பட்ட முதலமைச்சர் இறந்தவுடன் அவரது மகன் ராணா முதலமைச்சராவதும், அதன்பின் எடுக்கும் அதிரடி நடவடிக்கை தான் இந்த படத்தின் கதையாக இருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சேகர் கம்முலா இயக்க இருப்பதாகவும் அதில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் முதலமைச்சர் கேரக்டரில் தான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஏற்கனவே ’கொடி’ என்ற திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ள தனுஷ் மீண்டும் ஒரு அரசியல் படத்தில் அதிலும் முதலமைச்சர் கேரக்டரில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள ’தி க்ரே மேன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ மற்றும் ‘நானே வருவேன்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

ஜோதிகா போல் ரீஎண்ட்ரி ஆகிறாரா ஷாலினி அஜித்? வைரல் புகைப்படங்கள்!

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஜோதிகா போல ஷாலினியும் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகப்போகிறாரா?

விஜய் டிவியில் மேலும் ஒரு நட்சத்திர காதல் ஜோடியா? காதலை ஒப்புக்கொண்ட நடிகை!

விஜய் டிவியில் மேலும் ஒரு நட்சத்திர காதல் ஜோடியா? காதலை ஒப்புக்கொண்ட நடிகை!

தளபதி விஜய்யை அடுத்து இளம் ஹீரோவுடன் இணையும் சரத்குமார்!

 தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சரத்குமார், நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த பட ஹீரோ இந்த பிரபல நடிகரா?

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய 'மாநாடு' மற்றும் 'மன்மதலீலை' ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் நாகசைதன்யா நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க உள்ளார்.

25 வருடங்களுக்கு முன்பே விஜய் சூப்பர் ஸ்டார் ஆவார் என கணித்த நடிகர்!

25 வருடங்களுக்கு முன்பே 'விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் ஆவார்' என பிரபல நடிகர் ஒருவர் கணித்ததாக அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.