close
Choose your channels

நடிகை ஜெனிலியா மீண்டும் கர்ப்பமா?

Wednesday, December 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ஜெனிலியா அதன் பின்னர் 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'சச்சின்', வேலாயுதம்', உள்பட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் ரியான் என்ற ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் முதல் குழந்தை பிறந்த ஒரே வருடத்தில் ஜெனிலியா மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரித்தேஷ் தேஷ்முக் அவர்களின் குடும்ப நண்பர் ஒருவரின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜெனிலியாவின் புகைப்படத்தில் இருந்து அவர் மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ரித்தேஷ் தேஷ்முக் குடும்பத்தில் இருந்து இதுகுறித்த எந்த தகவல்களும் வெளிவரவில்லை என்றாலும் இந்த புகைப்படம் மிக வேகமாக சமூக இணையதளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.