close
Choose your channels

மாஸ் நடிகரின் படத்தில் இருந்து தூக்கப்பட்டாரா ராஷ்மிகா மந்தனா: ரசிகர்கள் அதிர்ச்சி!

Tuesday, June 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் ராஷ்மிகா மந்தனா தூக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் பாகத்தில் வள்ளி என்ற கேரக்டரில் புஷ்பாவை திருமணம் செய்யும் கேரக்டரில் நடித்திருந்த ராஷ்மிகா மந்தனா இரண்டாம் பாகத்தின் ஹீரோயின் இல்லை என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டாம் பாகத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் கொல்லப்படுவதாகவும், இதனை அடுத்து அல்லு அர்ஜுன் பாலிவுட் நடிகை ஒருவருடன் காதல் செய்வதாகவும் காட்சிகள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



மேலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிரடி மாஸ் காட்சிகள் இருக்கும் என்றும் உள்ளூரில் மரக்கட்டைகளை கடத்தி வந்த புஷ்பா, அடுத்த பாகத்தில் வெளிநாட்டுக்கு கடத்தி சர்வதேச அளவில் பிசினஸ் செய்யும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.