'பொன்னியின் செல்வன்' படத்தில் ஷாலினி நடிக்கின்றாரா?  அஜித் தரப்பு விளக்கம்

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் ஏற்கனவே இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஷாலினிஅஜித் நடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ என்ற நாவல் இரண்டு பாகங்களாக படமாக்கப்பட்டு வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ500 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், நிழல்கள் ரவி, லால், விஜயகுமார், நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஷாலினி அஜித் நடித்துள்ளதாகவும் அவரது கேரக்டர் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

ஆனால் இதுகுறித்து அஜீத்தின் மேனேஜர் விளக்கமளித்த, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஷாலினி அஜித் நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் இது முற்றிலும் தவறான தகவல் என்றும் ’ பொன்னியின் செல்வன்’ உள்பட எந்த படத்திலும் ஷாலினி அஜித் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஷாலினி அஜீத் நடித்துள்ளார் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான ’அலைபாயுதே’ என்ற திரைப்படத்தில் ஷாலினி அஜீத் நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'மாஸ்டர்' படம் பார்த்து மிரண்டு விட்டேன்: பிரபல பாலிவுட் நடிகர் பேட்டி

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை பார்த்து மிரண்டு விட்டேன் என்றும் விஜய்க்கு நான் மிகப்பெரிய ரசிகர் என்றும் பிரபல பாலிவுட் நடிகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

அருண் விஜய்யின் 'யானை' ரிலீஸ் தள்ளி போகிறதா?

அருண் விஜய் நடிப்பில் உருவான 'யானை'  திரைப்படம் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது

மீண்டும் இணையும் இளையராஜா - யுவன்: எந்த படத்திற்கு தெரியுமா?

முதல் முறையாக இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்தனர்.

30 வருட திருமண வாழ்க்கை: பிரபல நட்சத்திர ஜோடி பகிர்ந்த புகைப்படம் வைரல்!

பிரபல நட்சத்திர ஜோடி தங்களது 30வது திருமண நாளை நேற்று கொண்டாடிய நிலையில் இது குறித்த  புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

'தளபதி 67' படம் ஒரு கேங்ஸ்டர் படமா? லோகேஷ் கனகராஜின் வீடியோ வைரல்

கமலஹாசன் நடித்த 'விக்ரம்' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்தை இயக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.