மணிரத்னம் படம் மிஸ் ஆனது எப்படி? மனம் திறந்த 'மாஸ்டர்' நடிகர்

  • IndiaGlitz, [Sunday,May 17 2020]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஏற்கனவே கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலக பிரபலங்கள் அனைவரும் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன்ராமன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாந்தனு பாக்கியராஜ் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் திடீரென அந்த வாய்ப்பு தனக்கு கை நழுவிப் போனதாக சாந்தனு பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

’வானம் கொட்டட்டும்’ இயக்குநர் தனா தான் இந்த தகவலை தனக்கு கூறியதாகவும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் தன்னுடைய பெயரும் பரிசீலனையில் இருப்பதாகவும் தனக்கு தெரியவந்ததாக சாந்தனு கூறியுள்ளார்.

ஆனால் அந்த கேரக்டரின் வயதும் தன்னுடைய வயதும் முரணாக இருந்ததால் தான் அந்த கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் இருப்பினும் மணிரத்னம் அவர்களுடன் இயக்கத்தில் எதிர்காலத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் சாந்தனு மேலும் கூறியுள்ளார்.

தளபதி விஜய்யுடன் நடித்த ’மாஸ்டர்’ படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் சாந்தனு தற்போது விக்ரம் சுகுமாரன் இயக்கும் ’ராவணன் கூட்டம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓடிடியில் வெளியாகும் ஐந்து மொழி திரைப்படம்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது

திரையரங்குகளில் மதுபானங்கள்: பிரபல இயக்குனரின் ஐடியா

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிந்தாலும், மேலும் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? 'தல' மகளின் பைக் ரைடிங்

தல என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனி, மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி சிறந்த பைக் பிரியர் என்பது தெரிந்ததே. இந்த கொரோனா விடுமுறையிலும் தனது மகளை பின்னால் உட்கார

மேலும் ஒரு துயரச்சம்பவம்!!! லாரி விபத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிய 23 தொழிலாளிகள் பலி!!!

உத்திரப்பிரதே மாநிலத்தைச் சார்ந்த அவுரியா மாவட்டத்தில் லாரியில் பயணம் செய்த 23 புலம் பெயர்ந்த

வேப்பமர நிழல், கிணத்து குளியல், மண்வெட்டி வேலை, தாயம்: பிரபல நடிகரின் ஒருநாள் பொழுது

கொரோனா விடுமுறையில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் வீட்டில் இருந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வரும் நிலையில் மதயானைக்கூட்டம், பரியேறும்பெருமாள்‌, பிகில் போன்ற படங்களில்