வடகொரிய அதிபர் கோமாவில் இருக்கிறாரா??? பரபரப்பை கிளப்பும் முன்னாள் தூதர்!!!

  • IndiaGlitz, [Monday,August 24 2020]

 

உலகத்தின் தொலைத் தொடர்புகளில் இருந்து முற்றிலும் விலகி இருக்கும் நாடான வட கொரியாவின் நடவடிக்கைகள் பெரும்பாலும் வெளியுலகிற்கு தெரிவதில்லை. இந்நிலையில் வட கொரியாவின் பல்வேறு தகவல்களை அவ்வபோது தென் கொரிய அதிகாரிகள் வெளிப்படுத்தி வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டார் என்று உலகத்தின் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய போதும் தென் கொரிய வெளியுறவுத்துறை இந்தத் தகவலில் உண்மையில்லை எனக் கூறியிருந்தது. அப்படி வடகொரியாவை தொடர்ந்து கண்காணித்து வரும் தென்கொரியாவின் முன்னாள் தூதர் ஒருவர் பரபரப்பான தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

தென்கொரியாவின் முன்னாள் அதிபராக கிம் டே ஜங் பதவியில் இருந்தபோது அவரிடம் உதவியாளராக இருந்தவர் சாங் சாங்-மின். தற்போது இவர்தான் வடகொரிய அதிபர் கோமாவில் இருக்கிறார், இதனால் வடகொரியாவின் அதிகாரம் வெற்றிடமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக அதிபர் கிம் ஜாங் உன் சில அதிகாரங்களை தனது சகோதரியிடம் கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்படைத்தார். ஒருவேளை அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டால் வடகொரியா பெரும் ஆபத்தைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

மிக வலிமையான அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்த வடகொரியா தற்போது கொரோனா தாக்கத்தால் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரத்தின் சில பகுதிகளை அவரது தங்கை கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைப்பதாகக் கூறி அதை ஒப்படைக்கவும் செய்தார். இதற்கு முக்கியக் காரணமாக மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்பதையும் கிம் ஜாங் உன் சுட்டிக் காட்டியிருந்தார். இதனால் வடகொரியாவின் அரசியல் அதிகாரம் முழுக்க தங்கை கிம் ஜாங் உன்னுக்கு செல்ல இருக்கிறதா என்பதை சந்தேகத்துடன் பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.

இந்நிலையில் தென் கொரியாவின் முன்னாள் தூதர் சாங் சாங் –மின் வடகொரிய அதிபர் கிம் தற்போது கோமாவில் இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறார். மேலும் உடல்நிலை குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால் இந்நிலைமை வடகொரியாவிற்கு நன்மை அளிப்பதாக இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார். இத்தகவலை குறித்து வடகொரியாவின் அதிகாரப்பூர்வ ஊடகம் செய்தி எதையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து அதிபரைப் பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் இச்செய்தி உண்மையாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன. காரணம் அதிபர் இறந்து விட்டர் என்று உறுதியாக பாக்ஸ் நியூஸ் உட்பட பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. அதைத் தொடர்ந்து அதிபர் ஒரு தொழிற்சாலை தொடக்க விழாவில் கலந்து கொண்டு சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் அரசாங்க அலுவல்களிலும் அவர் கலந்து கொள்ளாதது பெரும் சந்தேகத்தையே எழுப்புகிறது.

More News

கைலாச நாட்டில் ஓட்டல் வைக்க அனுமதி கேட்டவர் மீது புகார்: பரபரப்பு தகவல் 

நித்தியானந்தாவின் கைலாச நாட்டில் ஓட்டல் வைக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதிய மதுரை ஹோட்டல் அதிபர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிறந்த நாளில் வித்தியாசமான பரிசு கொடுத்த பிரபல நடிகர்: ஆச்சரியத்தில் சிரஞ்சீவி

பிரபல தெலுங்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது என்பதும் அவருக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரையுலகினர்

ஓடிடியில் கீர்த்திசுரேஷின் அடுத்த படம்: எத்தனை கோடிக்கு விலை போனது?

திரைப்பட படப்பிடிப்புக்கு மத்திய அரசு நேற்று அனுமதி அளித்துவிட்ட போதிலும் திரையரங்குகளை திறப்பது குறித்து இன்னும் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.

தனுஷால் இந்தி பட வாய்ப்பை மறுத்த 'ராட்சசன்' இயக்குனர்!

விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கிய 'ராட்சசன்' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி

ஒரே நேரத்தில் 6 இடங்களில் கடல் நீரை உறிஞ்சும் மேகம்!!! ஹாலிவுட்டையும் மிஞ்சும் அற்புதக்காட்சி!!!

ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் மேகம் கடல் நீரை நேரடியாக உறிஞ்சுவதைப் போன்ற ஒரு புகைப்படத்தை தினத்தந்தி வெளியிட்டு இருக்கிறது.