அஜித்தின் 'விசுவாசம்' டைட்டிலுக்கு பின்னணி இதுதானா?

  • IndiaGlitz, [Friday,November 24 2017]

அஜித் நடிக்கும் 58வது படத்திற்கு 'விசுவாசம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்தததே. கடந்த சில ஆண்டுகளாக அஜித் நடிக்கும் படத்தின் டைட்டில் படப்பிடிப்பு நடைபெறும்போதுதான் வெளியாகும். ஆனால் இந்த படத்தின் டைட்டில் கமல், ரஜினி படங்கள் போன்று படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளதே முதல் ஆச்சரியம்

மேலும் அஜித் நடித்த முந்தைய படமான 'விவேகம்' எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்பதால் அவருக்கே மீண்டும் ஒரு படம் நடித்த கொடுக்க முடிவு செய்துள்ளார் அஜித்.  அதேபோல் 'விவேகம்' பட இயக்குனர் சிவாவை அஜித் ரசிகர்களே சிலர் வெறுத்துள்ளனர். மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க கூடாது என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். எனவே தன்னால் அவருக்கு கெட்ட பெயர் உண்டாகக்கூடாது, மீண்டும் அவரை ஒரு வெற்றிப்பட இயக்குனராக மாற்ற வேண்டும் என்பதால் மீண்டும் சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த இருவருக்கும் அஜித் காட்டும் விசுவாசத்தை மறைமுகமாக குறிப்பிடவே படத்தின் டைட்டிலை முதலில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வீரம் படத்தில் தம்பி செண்டிமெண்ட், வேதாளம் படத்தில் தங்கை செண்டிமெண்ட், விவேகம் படத்தில் மனைவி செண்டிமெண்ட் என தொடர்ந்து செண்டிமெண்ட் கலந்த ஆக்சன் படங்களில் நடித்து வரும் அஜித், இந்த படத்தில் நண்பன் செண்டிமெண்ட் கதையில் நடிக்கக்க்கூடும் என்றும், விசுவாசமான நண்பனுக்கு துரோகம் செய்பவர்களுக்கு விசுவாசம் என்றால் என்ன என்பதை தனது பாணியில் புரிய வைப்பதே இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் இந்த படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு செண்டிமெண்ட் படம் என்றும், அதே நேரத்தில் மீடியமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு லாபத்தை தரும் வகையில் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

தினகரன் போட்டி: மீண்டும் ஆர்.கே.நகரில் கொட்டப்போகும் பணமழை

சென்னை ஆர்.கே.நகரின் வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது முதல் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகியுள்ளன.

மணிரத்னம் படத்தின் முக்கிய பணி இன்று முதல் ஆரம்பம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

கமல் மீது வழக்குப்பதிவா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில் 'இந்து தீவிரவாதம் இல்லை என இனியும் கூற முடியாது' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

வெற்றி பெறாவிட்டாலும் சொன்ன சொல்லை காப்பாற்றிய சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்டவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றால் அந்த பணத்தின் மூலம் பொதுமக்களுக்கு நூலகம் ஒன்றை கட்டித்தர வேண்டும்

நாச்சியார் பட விவகாரம்: ஜோதிகா, பாலா மீது நீதிமன்றத்தில் வழக்கு

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.