close
Choose your channels

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி? பிரபல இயக்குனர் தகவல்

Wednesday, October 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த படத்தில் இருந்து அவர் சமீபத்தில் விலகினார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரபல இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்

சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்த திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ். இவர் தற்போது பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை வெப்தொடராக இயக்க இருப்பதாகவும் இந்த தொடரில் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கவிருந்த விஜய்சேதுபதியிடம் அவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கலாம் என்றும், அந்த வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்றும் சீனுராமசாமி, பாரதிராஜா உள்ளிட்டோர் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது பிரபாகரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் விஜய்சேதுபதி அதை ஏற்று நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.