close
Choose your channels

 இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள்: 'விடுதலை' குறித்து இசைஞானி இளையராஜா..!

Thursday, March 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘விடுதலை’ படத்தில் இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில், சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்றைய விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா இந்த படம் குறித்தும் வெற்றிமாறன் குறித்தும் பேசினார். ‘1500 படங்களில் பணிபுரிந்துள்ளேன், 1500 இயக்குனர்களுடன் பணி புரிந்துள்ளேன், நான் சொல்கிறேன், இந்த படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள் என்று தெரிவித்தார்.

மேலும் ‘இந்த படம் தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்படாத களத்தில் அமைந்த படமாக இருக்கும், வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு திரைக்கதையாக உள்ளது, அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் திரை உலகிற்கு வெற்றிமாறன் மிக முக்கியமான இயக்குனர் என்பதை சொல்லிக் கொள்வதில் நாம் சந்தோஷம் அடைகிறேன் என்றும் இளையராஜா தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos