லதா மங்கேஷ்கர் மறைவு குறித்து இசைஞானியின் உருக்கமான இரங்கல் வீடியோ!

பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் என்ற செய்தி வெளியானதை ஏற்கனவே பார்த்தோம். லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர். அதேபோல் ஒட்டுமொத்த திரையுலகமும் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இசைஞானி இளையராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘இந்திய திரைப்பட இசை உலக வரலாற்றில் கடந்த அறுபது எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தெய்வீகக் குரலால் உலக மக்களை எல்லாம் மயக்கி தன் வசத்தில் வைத்திருந்த லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைவு என்னுடைய மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேதனையை எப்படி போக்குவேன் என்பது எனக்கு தெரியவில்லை.

அவருடைய இழப்பு இசை உலகிற்கு மட்டுமல்ல, இந்த உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவரை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக ஆஷா அவர்களுக்கும், உஷா மங்கேஷ்கர் அவர்களுக்கும் என்னுடைய தனிப்பட்ட முறையிலான அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்’. இவ்வாறு இசைஞானி இளையராஜா இந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More News

கொரோனாவில் இருந்து குணமானவுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த முதல் வேலை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஷங்கரின் மகள்களுக்கே ஆட்டோகிராப் போட மறுத்த சூப்பர் ஸ்டார் நடிகர்!

இயக்குனர் ஷங்கரிடம் ஆட்டோகிராப் வாங்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அவருடைய மகள்களுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் ஆட்டோகிராப் போட மறுத்த தகவல்

ஓடிடி பக்கம் போவதில் தப்பே இல்லை: 'மாநாடு' வசூல் குறித்து வேதனை தெரிவித்த தயாரிப்பாளர்!

கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்த திரைப்படம் என்று கூறப்பட்ட 'மாநாடு' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஓடிடி பக்கம் போவது தவறே இல்லை

எலிமினேஷன் ஆகும் சுரேஷ், யாரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று எலிமினேஷன் உண்டு என்பதை கமல்ஹாசன் ப்ரோமோ வீடியோவில் உறுதி செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதற்கு அடுத்து வந்த புரமோவில்

சென்னை தி.நகர் தீ விபத்தில் சிக்கிய தமிழ் நடிகர்: நூலிழையில் உயிர் பிழைத்ததாக தகவல்!

சென்னை பாண்டிபஜாரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இந்த தீவிபத்தில் தமிழ் நடிகர் ஒருவர் சிக்கியதாகவும் அவர் நூலிழையில் உயிர் பிழைத்ததாகவும்