close
Choose your channels

தயாரிப்பாளர் ஐசரி கணேஷை நடிகராக்கிய விஜே சித்து.. தனுஷ் பகிர்ந்த 4 நிமிட வீடியோ..!

Friday, May 2, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

YouTube இல் பிரபலமான விஜே சித்து ஒரு திரைப்படம் இயக்க இருப்பதாகவும், அதில் அவரே முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், இந்த படத்தின் டைட்டில் வீடியோவை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷை இந்த படத்தில் விஜே சித்து நடிக்க வைத்துள்ளார். அவர் ஒரு தயாரிப்பாளராக இருக்கும் நிலையில், அவரிடம் விஜே சித்து தனது தந்தையுடன் சென்று சான்ஸ் கேட்பதும், அதன் பிறகு நடக்கும் நகைச்சுவையான காட்சிகளும் இந்த நான்கு நிமிட வீடியோவில் உள்ளன.

இறுதியில், "வெல்கம் டு விஜே சித்தூர் விலாக் அல்ல இது ஒரு முழு திரைப்படம்" என்று ஐசரி கணேஷ் கூறுகிறார். இறுதியில் ஐசரி கணேஷ், "கதை சூப்பர், ஆனால் உங்கள் படத்தின் டைட்டில் பயங்கரமாக இருக்க வேண்டும்" என்று கூற, அதற்கு விஜே சித்து "பயங்கரம்’ இல்லை, ‘டயங்கரம்’ தான் டைட்டில் என பதிலளிப்பதுடன் வீடியோ முடிகிறது.

மொத்தத்தில் இந்த நான்கு நிமிட வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜே சித்து முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் ஐசரி கணேஷ், இளவரசு, நிதின் சத்தியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment