12 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பிரமாண்டமான படம்.. ஐசரி கணேஷ் கூறிய ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,January 20 2024]

12 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய படம் ஒன்று பிரம்மாண்டமாக உருவாகி இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து தற்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மணிகள் தொடங்கியுள்ளதாகவும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் பல பிரமாண்டமான படங்களையும் வெற்றி படங்களையும் தயாரித்தவர் வேல்ஸ் நிறுவன உரிமையாளர் ஐசரி கணேஷ். இவரது தயாரிப்பில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் என்பதும் பலர் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய ஒரு பிரமாண்டமான படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாகவும் தற்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு பீரியட் படமாகவும் ஹாரர் கலந்த காமெடி படமாகவும் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் நாயகன், நாயகி, இயக்குனர் உட்பட எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த படம் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய ஜீவா நடிப்பில் உருவான படமாக தான் இருக்கும் என்று கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இயக்குனர் பார்த்திபனின் அடுத்த படத்தின் டைட்டில்.. செம்ம த்ரில்லிங் படமா இருக்கும் போல..!

பார்த்திபன் நடித்த இயக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவை பார்க்கும் போது இந்த படம் ஒரு செம்ம த்ரில்லிங் படமாக இருக்கும் என்று எத

தனுஷ் - சேகர் கம்முலா படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்: சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை சேகர் கம்முலா இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருவதாக

தளபதி விஜய்யின் 'கோட்' சிங்கிள் பாடல் தயார்.. ரிலீஸ் எப்போது?

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவாகி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக தயாராகி விட்டதாகவும்

தெலுங்கிலும் பட்டைய கிளப்பும் எஸ்.ஜே.சூர்யா.. பிரபல நடிகர் படத்தில் இணைந்ததாக அறிவிப்பு..!

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராகிவிட்ட எஸ்ஜே சூர்யா தற்போது தெலுங்கு திரையுலகிலும் பட்டையை கிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில்,

சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மறுமணம்.. மணப்பெண் ஒரு பிரபல நடிகையா?

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.