close
Choose your channels

ஒரே ஒரு வாக்குறுதி, இஸ்லாமிய பெண்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளும் குஷ்பு!

Wednesday, March 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்பு இஸ்லாமிய பெண்களை ஒரே ஒரு வாக்குறுதி மூலம் கவர்ந்து விட்டதாகவும் அதனால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் வாக்குகள் அவருக்கு தான் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பது தெரிந்ததே. பாஜக சார்பில் குஷ்பு போட்டியிடுவதால் அவருக்கு இஸ்லாமிய வாக்குகள் கிடைக்காது என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டது. ஆனால் குஷ்பூ ஒவ்வொரு இஸ்லாமியரின் வீடுகளுக்கும் சென்று அவர்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறார். குறிப்பாக இஸ்லாமிய பெண்களின் தேவையை அறிந்து அவர்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்க ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதியை அவர் கொடுத்துள்ளார்

இந்த ஒரே ஒரு வாக்குறுதி இஸ்லாமிய பெண்களை பெரிதும் கவர்ந்துவிட்டதாகவும் அதனால் அவர்கள் குஷ்புவுக்கு தங்கள் ஆதரவை கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் குஷ்பு வருகை தரும்போது இஸ்லாமிய பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அவரை அழைத்துச் சென்று அவரை ஆரத்தழுவி தங்களுடைய ஆதரவை கொடுத்து அசத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

பெரும்பாலான ஊடகங்களின் கருத்து கணிப்பின்படி ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறினாலும் கள நிலவரப்படி பார்த்தால் குஷ்புவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.