close
Choose your channels

தடுப்பூசிக்கு ஒரே விலையில்லையா...? மத்திய அரசை  சரமாரியாக கேள்வி கேட்கும் மம்தா, சோனியா....!

Thursday, April 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தடுப்பூசிக்கு வெவ்வேறு விலை நிர்ணயித்துள்ளதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் மத்திய அரசை பார்த்து சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர்.

கொரோனாவின் 2-ஆம் கட்ட அலை பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தி வருகிறது. முதல்கட்டமாக 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து மே-1 ஆம் தேதி முதல் 18-வயதிற்கும் அதிகமானோருக்கு கொரோனாதடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்றும், மாநில அரசுகளுக்கு ரூ.400 என்றும் விற்பனை செய்யப் போவதாக, இந்திய நிறுவனம் சீரம் அறிவித்திருந்தது.
இதையடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசியை வரும் ஏப்ரல்-24-ஆம் தேதி முதல் 18-வயதிற்கும் மேற்பட்டவர்கள் போட்டுக்கொள்ள, இன்று ஆன்லைன் பதிவு துவங்கவுள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,

" 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இந்திய பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசியை மத்திய அரசு வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு இதை இந்த பொறுப்பை கைவிட்டுள்ளது. கடந்த ஆண்டில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வலி மற்றும் நிலைமை குறித்து மத்திய அரசு இன்னும் உணரவே இல்லை.

மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி விலை ஒரே மாதிரி இருக்கவேண்டும்.புதிய கோவிட் கொள்கையில் தடுப்பூசியின் விலை ஒரேமாதிரியாக இல்லை. அரசு மக்களிடத்தில் பாரபட்சம் காட்டுவது போல் தோன்றுகிறது என சோனியா காந்தி அவர்கள் கூறியுள்ளார்.

இதுபற்றி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வியாழன்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

"இந்திய அரசு கொரோனா தடுப்பூசிக்கு ஒரு விலையைத்தான் நிர்ணயிக்க வேண்டும். வயது, சாதி, மதம், இருப்பிடம் உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல் குடிமகன்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும்.

ஒரே தேசம், ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று கூறும் கட்சியினர், மக்களின் உயிரைக் காக்கும் தடுப்பூசிக்காக ஒரே விலையை நிர்ணயிக்க தவறுவது ஏன்" என்று பதிவிட்டுள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.