close
Choose your channels

'பேட்ட' ரிலீசுக்கு அடுத்த நாள் வெளியாகும் அனிருத் பாடல்

Wednesday, January 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ரஜினியின் பழைய ஸ்டைல், கார்த்திக் சுப்புராஜின் சஸ்பென்ஸ், த்ரிஷா-சிம்ரனின் பங்களிப்பு, விஜய்சேதுபதியின் மிரட்டல் வில்லத்தனம் ஆகியவைகளோடு இந்த படத்தின் பிளஸ்களில் ஒன்று அனிருத்தி இசை. இவரது இசையில் 'மரணமாஸ்' உள்பட அனைத்து பாடல்களும் ஏற்கனவே பட்டையை கிளப்பி வைரலாகியுள்ளது.

இந்த நிலையில் 'பேட்ட' ரிலீசுக்குக் அடுத்த நாள் அதாவது ஜனவரி 11ஆம் தேதி அனிருத் பாடிய சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகவுள்ளது. பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' என்ற படத்திற்காக அனிருத் பாடிய 'கண்ணம்மா' என்ற பாடல் ஜனவரி 11ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண், மாகாபா ஆனந்த், ஷில்பா மஞ்சுநாத், பாலாசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். கவின்ராஜ் ஒளிப்பதிவில் பவன் ஸ்ரீகுமார் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.