விபத்தில் துண்டான சிறுவன் தலை… மீண்டும் பொருத்தி புது சாதனையே படைத்த மருத்துவர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இஸ்ரேல் நாட்டில் விபத்தில் துண்டான 12 வயது சிறுவனின் தலையை சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தி மருத்துவர்கள் சாதனையைப் படைத்துள்ள சம்பவம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் வசித்துவந்த 12 வயது சிறுவன் சுலைமான் ஹாசன். கடந்த மாதம் சைக்கிள் ஓட்டிச்சென்ற இந்த சிறுவன் மீது கார் ஒன்று வேகமாக மோதியதால் விபத்து ஏற்பட்ட நிலையில் அவனுடைய முதுகுத்தண்டில் இருந்து ஏறக்குறைய அவனுடைய தலை பிரிந்திருக்கிறது. மேலும் தசைநார்கள் கடுமையாக கிழிந்ததுடன் முதுகுதண்டில் இருந்து தலையின் பெரும்பாலான முன்பகுதி கிழிந்து முதுகு தண்டு எலும்பில் இருந்து மண்டை ஓடு பிரிந்திருக்கிறது.
இதையடுத்து விபத்துக்குள்ளான சிறுவன் உடனடியாக விமானம் மூலம் ஹடாசா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளார். அங்குள்ள எலும்பியல் மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சையை புது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்துள்ளனர். அட்லாண்டோ ஆக்ஸிபிடல் மூட்டு இடம்பெயர்வு என அழைக்கப்படும் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை டாக்டர் ஒஹட் ஈனாவ் என்பவர் தனது குழுவினருடன் புது தொழில்நுட்பத்தை வைத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
அதாவது முன்பகுதி முழுவதும் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த சிறுவனின் தலைக்குள் புது தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட பிளேட்டுகளை பொருத்தி CCrvical Splint எனும் அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். மேலும் 50% நம்பிக்கையை மட்டுமே கொண்டிருந்த மருத்துவர்கள் கடந்த மாதமே நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை குறித்து எதுவும் அறிவிக்காத நிலையில் தற்போது சிறுவன் குணமடைந்துள்ள நிலையில் அதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் தற்போது சிறுவன் நரம்பியல் அடிப்படையிலும் உணர்வு அடிப்படையில் மிக நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் எந்தவித சிக்கலும் இல்லாமல் அவர் குணமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையினால் தற்போது உதவியாளர் இன்றி சுலைமான் ஹாசன் நடந்து செல்வதைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய மருத்துவர் ஓஹட் ஈனாவ் மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் திறமையான மருத்துவர்கள் வேண்டும். நிபுணத்துவத்தினால் எந்தவித சிக்கலையும் தீர்த்துவிட முடியும் என்று அவர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout