இது எனக்கு 8வது பிறந்த நாள்: நயன்தாரா துள்ளி குதிக்கும் வீடியோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

நயன்தாராவுடன் நான் 8வது ஆண்டாக பிறந்த நாளை கொண்டாடுகிறேன் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் நயன்தாரா மற்றும் தனது குடும்பத்தினருடன் துபாயில் பிறந்தநாள் கொண்டாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்தில் முன் அவர் நயன்தாராவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் துபாயில் உள்ள வெட்டவெளி பகுதியில் விக்னேஷ் சிவன் நயன்தாரா மற்றும் குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இது குறித்து விக்னேஷ் சிவன் கூறிய போது, ‘நயன்தாராவுடன் நான் 8வது முறையாக பிறந்தநாள் கொண்டாடுகிறேன். என் தங்கமே உனக்கு எனது நன்றி! ஒவ்வொரு பிறந்த நாளையும் முந்தைய பிறந்தநாளை காட்டிலும் சிறப்பானதாக மாற்றியுள்ளாய். ஆனால் இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் உணர்ச்சிவசமானது. உன்னை காதலியாக அடைந்ததற்கு நன்றி! என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்வது எப்படி என்பது உனக்கு தெரியும். அதை நீதான் எனக்கு கற்றுக் கொடுத்தாய். நீ என்னை நேசிக்கும் விதம் என்னை மென்மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் நயன்தாரா துள்ளிக்குதிக்கும் காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

40 வயதில் செம கிளாமர்; நடிகை மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

40 வயதாகும் நடிகை மீராஜாஸ்மின் கடந்த சில வாரங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன்னர் தனது சற்றுமுன் உள்ளாடையுடன்

கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்து இளம்பெண்ணின் கண்ணீரை துடைத்த தியாக மனைவி!

கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து இளம் பெண் ஒருவரின் கண்ணீரை துடைத்து வைத்த மனைவியின் தியாக மனப்பான்மை இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிங்க் உடையில் ஒரு பேரழகி.. அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளும் கார்த்தியின் 'விருமன்' திரைப்படத்தில் நாயகியாக நடித்தவருமான அதிதிஷங்கர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

கார்த்தி-ராஜூமுருகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது? சூப்பர் தகவல்!

கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 

லக்கி போட்டோகிராபர்: ரம்யா பாண்டியனின் போட்டோஷூட்டுக்கு நெட்டிசன்கள் கமெண்ட்

நடிகை ரம்யா பாண்டியனை போட்டோஷூட் எடுத்தவரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அந்த போட்டோகிராபரை லக்கி என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.