வெளிநாட்டு இறக்குமதியில் இனி இது மட்டும் கூடாது!!! கெடுபிடிக் காட்டும் மத்திய அரசு!!!

  • IndiaGlitz, [Friday,July 31 2020]

 

இந்தியாவில் தற்சார்பு பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையிலான பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தற்போது சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து கலர் டிவிக்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. முன்னதாக சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தொழில்நுட்பம் சார்ந்த பல நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றன. அதனால் ஸ்மாட் போன் உள்ளிட்ட பல தொழில்நுட்ப சாதனங்கள் சொந்த தயாரிப்பிலேயே உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

இந்நிலையில் கலர் டிவிக்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இதனால் தற்சார்பு பொருளாதாரக் கொள்கையில் மேம்பாடு நடக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் ஒரு ஆண்டிற்கு 78.10 கோடி டாலர் மதிப்பிலான டிவிக்கள் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் சீனாவில் இருந்து 29.20 கோடி டாலர் மதிப்பிலான டிவிக்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. அடுத்து வியட்நாமில் இருந்து 42.80 கோடி டாலர் மதிப்பிலான டிவி இறக்குமதிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதேபோல மலேசியா, ஹாங்காங், கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜெர்மனி போன்ற நாட்டு தயாரிப்புகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

தற்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்தக் கட்டுப்பாடுகளால் சீனாவிற்கு கடும் இழப்பீடு ஏற்படும் எனவும் நம்பப்படுகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்பட்டு இருக்கும் எல்லைப் பிரச்சனையில் சீனாவிற்கு இடையிலான வர்த்தகம் மற்றும் ஒப்பந்தத்தில் கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதுவரை 106 சீனச் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விக்கப்பட்டுள்ளன. தற்போது டிவிக்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இனிமேல் கட்டாயத்தின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட நேர்ந்தாலும் இந்திய நிறுவனங்கள் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இருக்கும் இயக்குநரகத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

5 மாதமா பள்ளிகள் இயங்கல… 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்!!! அதிர்ச்சி ஏற்படுத்தும் பகீர் தகவல்!!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலிவியில் கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் இயங்கவில்லை. இதற்கு நடுவில் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது

2வது குழந்தையுடன் வொர்க்-அவுட் செய்யும் சினேகா: வைரல் வீடியோ

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர் சினேகா. 'என்னவளே' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் 'ஆனந்தம்' 'பார்த்தாலே பரவசம்' 'ஏப்ரல் மாதத்தில்' 'வசீகரா' 'வசூல்ராஜா

99 வயதில் விமானம் ஓட்டி, கின்னஸ் சாதனை படைத்த பாட்டி!!! குவியும் பாராட்டு!!!

உலகிலேயே அதிக வயதில் விமானம் இயக்கி கின்னஸ் சாதனைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ரோபினா ஆஸ்தி.

கொரனோ காலத்திலும் கடவுள் பெயரில் பணம் கையாடல்: அதிர்ச்சி தகவல்

கொரோனா காலத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கடவுள் பெயரிலும் ஒரு ஊழல் நடந்துள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

ஆன்லைன் ரம்மி விவகாரம்: விராட் கோலி, தமன்னா கைது செய்யப்படுவார்களா?

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்றும் ஆன்லைன் விளையாட்டுக்களால் பலர், குறிப்பாக இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து ஒருசிலர் தற்கொலைக்கு முயல்வதாகவும் கூறப்பட்டு வந்தது