முகநூல் மூலம் காதல் வலை: 6 பெண்களை திருமணம் செய்த ஐடி ஊழியர் கைது!

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

முகநூல் மூலம் காதல் வலை வீசி 6 பெண்களை திருமணம் செய்த ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த ஐடி ஊழியர் விஜயபாஸ்கர். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு முதலாவது திருமணம் நடந்தது. இந்த நிலையில் மனைவி வீட்டில் இருக்கும் போதே அவர் முகநூல் மூலம் இளம் பெண்களுக்கு காதல் வலை வீசினர். குறிப்பாக ஐடி துறையில் உள்ள இளம் பெண்கள் வசதியாக இருப்பார்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு காதல் வலை வீசியுள்ளார்.

அவருடைய முகநூல் காதல் வலையில் தொடர்ச்சியாக ஐந்து பெண்கள் ஏமாந்துள்ளதாகவும், அவர்களிடம் ஆசை வார்த்தை காட்டி திருமணம் செய்து சில நாட்கள் அவர்களுடன் வாழ்ந்துவிட்டு பின் அவர்களிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு எஸ்கேப் ஆகி வந்தார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் ஆறாவதாக சவுஜன்யா என்ற பெண்ணை முகநூல் மூலம் பழகி திருமணம் செய்துள்ளார். தனது கணவர் அடிக்கடி காரில் உட்கார்ந்து கொண்டு செல்போனை நோண்டிக் கொண்டு இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த சவுஜன்யா, விஜயபாஸ்கர் இல்லாத போது அவருடைய செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் சிவானி என்ற பெண்ணிற்கு வீடியோ அனுப்பி ஏழாவது திருமணம் செய்ய முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து அவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இதுகுறித்து கூறியதை அடுத்து சவுஜன்யாவின் உறவினர்கள் விஜயபாஸ்கரை அடித்து உதைத்து அவரிடம் இருந்து உண்மையை வரவழைத்தனர்.

அதன் பின்னர்தான் முகநூல் மூலம் காதல் வலை வீசி 6 பெண்களை திருமணம் செய்ததை விஜயபாஸ்கர் ஒப்புக்கொண்டார் இதனை அடுத்து ஹைதராபாத் போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இதனை அடுத்து அவரால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் புகார் பெரும் பணியில் தற்போது போலீசார் உள்ளனர்.

முகநூல் மூலம் அடுத்தடுத்து 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை பறித்த ஐடி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

தற்கொலை செய்து கொண்ட விஜே சித்ராவின் கடைசி வீடியோ!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்பட பல தொலைக்காட்சி சீரியலில் நடித்த விஜே சித்ரா திடீரென இன்று அதிகாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்ன திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை!

கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தம் காரணமாகவும், காதல் தோல்வி உள்பட ஒருசில காரணங்களாலும் சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர், நடிகைகள் சிலர் தற்கொலை செய்து வருகின்றனர்.

குழந்தையுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேக்னாராஜ்!

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

தந்தை இறப்பு குறித்து பேசியதால் ஆத்திரமான அர்ச்சனா: பதிலடி கொடுத்த சுசித்ரா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெறும் 'புதிய மனிதா' என்ற டாஸ்க்கில் அர்ச்சனா தலைமையில் ரோபோ அணியும், பாலாஜி தலைமையில் மனிதர்கள் அணியும் இடம் பெற்று உள்ளன.

டெனட் படத்தில் 'வலிமை' டெக்னீஷியன்: அஜித் ரசிகர்கள் வாழ்த்து!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'டெனட்' திரைப்படம் கடந்த 4ஆம் தேதி இந்தியாவில் வெளியானது என்பதும், இந்தப் படம் தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி