விஜய்-அஜித் படங்களை இயக்க வேற ஒரு மேஜிக் வேண்டும். பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,June 23 2017]

ஜெயங்கொண்டான்', கண்டேன் காதலை', சேட்டை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் இயக்கிய 'இவன் தந்திரன்' திரைப்படம் விரைவில் ரிலிஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் கண்ணன், விஜய் அஜித் படங்களை இயக்க வேற ஒரு மேஜிக் வேண்டும் என்றும் இன்னும் அதற்கு தான் தயாராகவில்லை என்றும் கூறினார்

தற்போது ரூ.5 கோடி, 6 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படங்களை இயக்கி வருவதாகவும், என்னை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர் எந்த விதத்திலும் நஷ்டம் அடைந்துவிட கூடாது என்ற கவனத்தில் படம் இயக்குவதாகவும் கூறினார். மேலும் விஜய் , அஜித் படங்கள் என்றால் குறைந்தபட்சம் 60 கோடி 70 கோடி ரூபாய் பட்ஜெட் ஆகும் என்றும் அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க வேற ஒரு மேஜிக் வேண்டும் என்றும் கூறிய கண்ணன், இன்னும் ஒருசில படங்களை இயக்கிய பின்னர் அதுபோன்ற முயற்சிக்கு தயாராவேன்' என்று கூறினார்.

மேலும் 'இவன் தந்திரன்' படம் குறித்து இயக்குனர் கண்ணன் கூறியபோது, 'இஞ்சினியரிங் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் திறமைசாலி மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் சவால்கள் தான் இந்த படத்தின் கதை. ஒரு இஞ்சினியரிங் படித்த இளைஞனின் சம்பளத்தை விட பத்தாவது படித்துவிட்டு கால்டாக்ஸி ஓட்டும் டிரைவருக்கு சம்பளம் அதிகம். அப்படியென்றால் படித்த படிப்புக்கு என்ன மரியாதை இருக்கு என்பதை சமூக அக்கறையுடன் இந்த படத்தில் கூறியுள்ளேன்' என்று கூறினார்.

More News

சிம்பு ரசிகர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

விராத் கோஹ்லி இவ்வளவு அர்ப்பமானவரா? கும்ப்ளே ரசிகர்கள் கொதிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது வெட்டவெளிச்சமானதை அடுத்து பயிற்சியாளர் பதவியில் இருந்து நாகரீகமாக விலகினார் கும்ப்ளே.

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் பெயர் அறிவிப்பு

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது

பும்ரா வீசிய நோபால் இதுக்காவது பயன்படுதே!

சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியை இப்பொழுது நினைத்தாலும் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் அளவில்லாத ஆத்திரம் வரும். குறிப்பாக பும்ரா வீசிய நோபாலில் தப்பிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஜமான், 111 ரன்கள் அடித்ததும் இந்தியாவின் தோல்விக்கு இதுவும் ஒரு மிகப்பெரிய காரணம் என்பதையும் இன்னும் சில வருடங்&

ரஜினியின் '2.0' படத்துடன் கனெக்சன் ஆன தனுஷின் 'விஐபி 2'

தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.