close
Choose your channels

சூப்பர்ஹிட் பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் பிக்பாஸ் ஐக்கி பெர்ரி!

Sunday, January 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான ஐக்கி பெர்ரி, சூப்பர் ஹிட் பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான ஐக்கி பெர்ரி சூப்பராக விளையாடினார் என்பதும் இருப்பினும் அவர் 56வது நாளில் எதிர்பாராத வகையில் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எலிமினேஷனுக்கு பின்னரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக ஐக்கி பெர்ரி இருந்து வருகிறார் என்பதும், அதே சமயத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அனைத்து போட்டியாளர்களுடன் சந்தித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தார் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகின என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சூப்பர் காஸ்ட்யூமில் விஷால் நடித்த ’எனிமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டும் டும்’ என்ற பாடலுக்கு ஐக்கி பெர்ரி செம ஆட்டம் ஆடியுள்ளார். இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஐக்கி பெர்ரி வெளியிட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.