close
Choose your channels

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு: பிரபல நடிகர் அறிவிப்பு

Monday, February 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பேன் என்று பிரபல நடிகர் ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் வூகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்பட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கொரோனா வைரசை ஒழிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம் என்றும் இந்த வைரசை கட்டுப்படுத்த விரைவில் மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இந்த மருந்தை தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ கண்டுபிடித்தால் அவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் அளிப்பேன் என்றும் ஜாக்கிசான் அறிவித்துள்ளார். ஜாக்கி சானின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.