close
Choose your channels

ஜடேஜாவை கேப்டனாக்கி அழகு பார்ப்பாரா தல தோனி?

Tuesday, April 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 37 ரன்கள் அடித்தும், 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும் ஜடேஜா மிக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து அவர் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டே தல தோனி அவர்கள் ஜடேஜாவை கேப்டன் ஆக்கி அவரை வழிநடத்த டிரெனிங் கொடுத்து விட்டு விடைபெற வேண்டும் என்று பல கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தோனி களத்தில் இருக்கும் போதே ஜடேஜா கேப்டன் பதவியை ஏற்று தோனியிடம் இருந்து பல வித்தைகளை அவர் கற்றுக் கொள்ளலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தல தோனி இந்த ஆண்டே அதனை செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா? இல்லையா? என்பது தெரியாத நிலையில் ஒரு நல்ல கேப்டனை அவர் உருவாக்கி தனது இடத்தில் வைத்து விட்டு செல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.