அஜித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 30 2019]

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் அஜித் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்து வருகிறது. மூன்று வாரம் முடிந்த பின்னரும் திரையரங்குகளில் இந்த படத்திற்கு இன்னும் குடும்ப ஆடியன்ஸ்கள் குவிந்து கொண்டிருப்பதே இந்த படத்தின் இமாலய வெற்றிக்கு சான்று

இந்த நிலையில் தமிழில் சூப்பர் ஹிட் ஆன் இந்த படம் கன்னடத்தில் டப் செய்து விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் கன்னட பதிப்பிற்கு 'ஜகமல்லா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'விஸ்வாசம்' படத்தின் கன்னட டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

மேலும் 'விஸ்வாசம்' தமிழ் திரைப்படம் ஏற்கனவே கர்நாடகாவில் வெளியாகி ஒரிஜினல் கன்னட படங்களின் வசூலை முறியடித்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.