close
Choose your channels

கவுதம் மேனனின் அடுத்த பட ரிலீஸ் தேதி

Sunday, July 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின்னர் வேறு படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் அவரது தயாரிப்பில் 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்', 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய படங்களும் அவரது இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களும் உருவாகி வருகின்றன.
இந்நிலையில் நீண்ட நாள் கிடப்பில் இருந்த தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளிவந்துளது. இந்த படம் விரைவில் ரிலீஸ் என்று இன்றைய தினசரிகளில் விளம்பரம் வந்திருந்தபோதிலும் வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
ஜெய், யாமி கெளதம், சந்தானம், விடிவி கணேஷ், நாசர், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரேம்சாய் இயக்கியுள்ளார். கார்த்திக் இசையமைத்துள்ள இந்த படம் கவுதம்மேனனின் ஸ்டைலில் உருவாகியுள்ள ரொமான்ஸ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.