close
Choose your channels

சன்னிலியோனுடன் 2வது முறையாக குத்தாட்டம் ஆடும் தமிழ் நடிகர்

Wednesday, January 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் முதல்முறையாக 'வடகறி' என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த பாடலில் சன்னிலியோனுடன் ஜெய் நடனம் ஆடியிருந்தார்.

இந்த நிலையில் சன்னிலியோனுடன் மீண்டும் ஒரு படத்தில் ஜெய் நடனமாடவுள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து வரும் 'மதுர ராஜா' என்ற மலையாள படத்தில் ஜெய் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனமாடவிருப்பதாகவும், அவருடன் ஜெய் ஆடவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகை சன்னிலியோன் ஏற்கனவே 'ரங்கீலா' என்ற மலையாள படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பதும் அவர் தமிழில் 'வீரமாதேவி' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.