close
Choose your channels

இன்று முதல் ஆரம்பமாகிறது 'பிரேக்கிங் நியூஸ்'

Thursday, February 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஹீரோ படம் ஒன்றில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தின் டைட்டில் 'பிரேக்கிங் நியூஸ்' என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் 'பிரேக்கிங் நியூஸ்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இதனையடுத்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கவுள்ள இந்த படம் ஒரு சாதாரண மனிதன் திடீரென சூப்பர் ஹீரோவாக மாறி செய்யும் சாகசங்கள் குறித்த கதையம்சம் கொண்டது. ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் சுமார் 90 நிமிடங்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சி இருக்கும் என்று கூறப்படுகிறது.

'பிரேக்கிங் நியூஸ்' படத்திற்கு விஷால் பீட்டர் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணியை ஜான் லால் ஒப்புக்கொண்டுள்ளார். நடிகர் ஜெய் ஏற்கனவே வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி', 'நீயா 2', 'மதுர ராஜா போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.