close
Choose your channels

ஜெய்யின் 'ஜருகண்டி' சென்சார் தகவல்

Tuesday, July 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெய நடிப்பில் அவருடைய நண்பர் நிதின்சத்யா தயாரிப்பில் உருவாகி வந்த 'ஜருகண்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிட்ப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. அதனையடுத்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து 'U' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிந்துவிட்டதால் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

ஜெய, ரெபா மோனிகா, அமித் திவாரி, ரோபோ சங்கர், இளவரசு, போஸ் வெங்கட் உள்பட பலர் நடித்துள்ள 'ஜருகண்டி' படத்தை பிச்சுமணி என்பவர் இயக்கியுள்ளார். போபோ ஷாஷி இசையில் ராஜசேகர் ஒளிப்பதிவில் ப்ரவீண் பட்த்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.