சூர்யாவின் 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,January 24 2022]

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ‘ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் ஆதரவால் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ‘ஜெய்பீம்’ படம் ஏற்கனவே ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது என்பதும் ஆஸ்கார் யூடியூப் சேனலில் இடம் பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் 3 விருதுகளை பெற்றுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான விருது லிஜோமோல் ஜோஸ்க்கும் சிறந்த திரைப்படத்துக்கான விருது ஆகிய மூன்று விருதுகளை ‘ஜெய்பீம்’ திரைப்படம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து படக்குழுவினருக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

படு மோசமான கார் விபத்தில் சிக்கிய நடிகர் அர்னால்ட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஹாலிவுட் ஜாம்பவான் நடிகரான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் மோசமான

மீண்டும் மோதுகிறதா விஜய்-சிம்பு படங்கள்?

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' மற்றும் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் மீண்டும் விஜய் மற்றும் சிம்பு படங்கள் ஒரே நாளில் ரிலீசாக

மீண்டும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடும் சமந்தா?

தெலுங்கு திரை உலகின் மாஸ் ஹீரோவான அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் சமந்தா ஆடிய ' ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா' என்ற ஐட்டம் டான்ஸ் பாடல் மிகப் பெரிய அளவில்

மெலடி இசை அரசர் இமான் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்: யார் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை ஹீரோ மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.