close
Choose your channels

இயக்குனர் நெல்சனுக்கு ஆச்சரிய பரிசு கொடுத்த 'ஜெயிலர்' நடிகர்.. வைரல் புகைப்படம்..!

Tuesday, March 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இயக்குனர் நெல்சனுக்கு பாலிவுட் நடிகர் அளித்த ஆச்சரியமான பரிசு குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், அனிருத் திசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தவிர கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் சமீபத்தில் இணைந்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி நடிகை தமன்னா முக்கிய கேரக்டரில் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், இயக்குனர் நெல்சனுக்கு இருசக்கர வாகனம் ஒன்றை பரிசளித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை நெல்சன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து நடிகர் ஜாக்கி ஷெராப் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.