close
Choose your channels

 'ஜெயிலர் 2' படத்திலும் இணைந்த முதல் பாக நடிகை.. ரகசியத்தை சொல்வாரா ரஜினி?

Friday, April 11, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ படத்தில் நடித்த நடிகை, ’ஜெயிலர் 2’ படத்திலும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் ’ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் கட்ட கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருவதாகவும், கோவையில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ’ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தில் ரஜினி நடித்த ‘டைகர் முத்துவேல் பாண்டியன்’ கேரக்டரின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்த மிர்ணா மேனன் நடித்திருந்த நிலையில், மீண்டும் ’ஜெயிலர் 2’ படத்திலும் அவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் நடைபெறும் படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் பாகத்தின் கிளைமேக்ஸில் மிர்ணாவின் கணவரை ரஜினிகாந்த் சுட்டு கொல்லும் காட்சி இடம்பெற்றது. இந்த உண்மை, அவரது மருமகளுக்குத் இன்னும் தெரியாது என்பதால் இந்த ரகசியத்தை இரண்டாம் பாகத்தில் ரஜினி கூறுவாரா? என்பதையும் ’ஜெயிலர் 2’ படத்தில் தான் கண்டறிய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment