'ஜெயிலர்' படத்தின் ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படங்கள்.. செம ஆக்சன் படமாக இருக்கும்போல..!

  • IndiaGlitz, [Thursday,February 09 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த புகைப்படங்களை பார்க்கும் போது இந்த படம் செம ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்’. இந்த படத்தின் 75% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது ராஜஸ்தானில் உள்ள ஜெயிசல்மார் என்ற பகுதியில் அதிரடி ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் உள்ள சில காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது. அதில் கவிழ்ந்து கிடக்கும் வாகனங்கள் இருப்பதை பார்க்கும்போது இந்த படத்தில் செம ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நெல்சன் இருக்கும் இன்னொரு புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

More News

சொன்னப்படியே போலீஸில் புகார் அளித்த விஜே மகேஸ்வரி.. சிக்க போவது யார் யார்?

 பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட விஜே மகேஸ்வரி தன்னை பற்றியும் தனது மகனைப் பற்றியும் அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

மாலத்தீவில் செம கிளாமரில் கலக்கும் விஜய் டிவி பிரியங்கா: முத்த வீடியோ வைரல்..!

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்கா சமீபத்தில் மாலத்தீவு சென்று இருந்த நிலையில் அங்கு கிளாமர் உடையில் கலக்கிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ராதையின் கண்ணனாக மாறி ரொமான்ஸ் செய்யும் மஞ்சுவாரியர்.. செம புகைப்படங்கள்..!

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கண்ணனாக மாறி ராதையுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

தரமான கல்வி வேணும்ன்னா காசு கொடுக்கணும்: 'வாத்தி' டிரைலர்

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் வரும் 18 ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

குடித்துவிட்டு ரகளை செய்தாரா ஓட்டேரி சிவா? கண்ணீருடன் அளித்த விளக்கம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதிய கோமாளி ஓட்டேரி சிவா முதல் வாரம் மட்டுமே வந்த நிலையில் அடுத்த வாரம் நீக்கப்பட்டார்.