close
Choose your channels

'ஜெயிலர்' படத்தின் ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படங்கள்.. செம ஆக்சன் படமாக இருக்கும்போல..!

Thursday, February 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த புகைப்படங்களை பார்க்கும் போது இந்த படம் செம ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்’. இந்த படத்தின் 75% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது ராஜஸ்தானில் உள்ள ஜெயிசல்மார் என்ற பகுதியில் அதிரடி ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் உள்ள சில காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது. அதில் கவிழ்ந்து கிடக்கும் வாகனங்கள் இருப்பதை பார்க்கும்போது இந்த படத்தில் செம ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நெல்சன் இருக்கும் இன்னொரு புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.