விருதை விட இந்த வார்த்தைகள் பெரியது.. ஜேம்ஸ் கேமரூன் பாராட்டால் நெகிழ்ந்த ராஜமெளலி : வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,January 21 2023]

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலியை நேரில் சந்தித்த பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவருக்கு பாராட்டு தெரிவித்த நிலையில் ’விருதை விட உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகவும் பெரிது’ என நெகிழ்ச்சி அடைந்து கூறியுள்ளார்.

இயக்குனர் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடித்த இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை பெற்ற இந்த படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி அவர்களுக்கு கோல்டன் குளோப் விருது சமீபத்தில் கிடைத்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’டெர்மினேட்டர்’ ’டைட்டானிக்’ ’அவதார்’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கேம்ஸ் கேமரூன் சமீபத்தில் எஸ்எஸ் ராஜமெளலியை சந்தித்து பேசிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் ’டெர்மினேட்டர் முதல் டைட்டானிக் வரை உங்களது அனைத்து படங்களும் பிடிக்கும் என ராஜமௌலி கூற அதற்கு, ‘நீங்கள் உங்களது படங்களின் கதாபாத்திரங்களை சரியாக வடிவமைத்து இருக்கிறீர்கள், அந்த கதாபாத்திரங்கள் உணர்ச்சி மிகுந்ததாக உள்ளது, குறிப்பாக நீர் நெருப்பு என நீங்கள் படத்தின் கேரக்டர்களை செட்டப் செய்துள்ளீர்கள் என்றும் ஜேம்ஸ் கேமரூன் பாராட்டினார்.

மேலும், ‘ஹீரோ என்ன செய்கிறார்? ஏன் செய்கிறார்? என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் ரிவில் செய்கிறீர்கள் என்றும் உங்கள் படத்தின் மியூசிக் அனைத்துமே சூப்பராக இருந்தது என்றும் தெரிவித்தார். இதனை கேட்ட ராஜமெளலி, ‘விருதுகளை விட உங்களுடைய இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பெரிது’ என கூறினார்.

மேலும் ’இந்த படத்தை தான் இரண்டு முறை பார்த்ததாகவும், இந்த படத்தை எடுக்க உங்களுக்கு எவ்வளவு நாள் ஆனது என்று கேமரூன் கேட்க, அதற்கு ராஜமெளலி, ‘320 நாட்கள் ஆனது’ என கூற, உடனே ஜேம்ஸ், ‘உலகத்திலேயே நீங்கள் தான் டாப்’ என புகழாரம் சூட்டினார். மேலும், ‘இங்கே ஹாலிவுட் படம் எடுக்க வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள், நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்’ என்றும் ஜேம்ஸ் கேமரூன் கூறியது அந்த வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் 'பத்து தல' படத்தின் சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் செம குஷி!

சிம்பு நடித்த 'பத்து தல'  என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஷாலின் அடுத்த படத்தில் இணைந்த 'ஜெயிலர்' நடிகர்.. அதிரடி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தில் சமீபத்தில் இணைந்த பிரபல நடிகர் ஒருவர் விஷால் நடித்து வரும் அடுத்த படத்திலும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தமிழ் நடிகர்-தயாரிப்பாளருக்குக் ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!

பிரபல தமிழ் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்ததை அடுத்து திரையுலகினார் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

உங்களுக்கும் பெட்டிக்கும் ஒரு ராசி இருக்கு... பிக்பாஸ் கலாய்த்தது யாரை?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த ஒருவரை உங்களுக்கும் பெட்டிக்கும் ஒரு ராசி இருக்கு என பிக் பாஸ் கலாய்த்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

பிரத்யேக ஸ்டைலில் ஆடை: பாராட்டுகளை குவிக்கும்  ஃபேஷன் ஐகான் ராம் சரண்

இன்று இந்திய திரையுலகம், தெலுங்கு திரையுலகத்தை வியந்து பார்க்கும் காலகட்டம் இது. பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் தெலுங்கு திரையுலகம்,