close
Choose your channels

தனுஷின் அடுத்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்!

Monday, September 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் புதிய திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்றும், ஐரோப்பிய கேங்ஸ்டர் மற்றும் இந்திய வம்சாவளி கேங்ஸ்டருக்கும் இடையே நடைபெறும் மோதல் தான் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அவர்கள் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். பென்ஹர்', 'டுமாரோ', 'எலிமினேட்டர்', 'வொண்டர் வுமன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ இந்த படத்தில் இணைந்திருப்பதை புகைப்படம் ஒன்றும் உறுதி செய்துள்ளது.

தனுஷின் 40வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.