PBSS பள்ளி விவகாரம்: மதுவந்திக்கு ஜேம்ஸ் வசந்தனின் கோரிக்கை!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒய்ஜி மகேந்திரன் மகள் மதுவந்திக்கு கோரிக்கை விடுத்து தனது முகநூலில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

அன்புள்ள மதுவந்தி, படித்த, வசதியான, ஒரு உயர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த, நல்ல திறமைசாலியான நீ உணர்ச்சிவசப்படாமல், கொஞ்சம் நிதானித்து, நம்மூர்ப்பக்கம் சொல்கிற மொழியில் சொன்னால் 'கொஞ்சம் சூதானமா' இருந்திருந்தால்.. என் பாட்டியின் பள்ளியின் பெயர் கெட்டுப்போக விடமாட்டேன் என்று நீ நினப்பது போலவே ஒரு பிரச்சனை இல்லாமல் போயிருக்கும்.

எப்ப இப்படி ஒரு அசம்பாவிதம் சில பெண் குழந்தைகளுக்குத் உங்கள் பள்ளியில் நடந்துவிட்டதோ, உடனே அந்தக் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்தப் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி, அவனை விடமாட்டேன் என்கிற தொனியில் மக்களிடம் ஒரு சிறு வேண்டுகோள் விடுத்து.. இந்த இக்கட்டான நேரத்தில் என்னோடும், எங்கள் பள்ளியோடும் துணை நில்லுங்கள். இப்படி ஒரு தவறானவன் உள்ளே இருந்திருக்கிறான். அவன் செய்த தவறுக்கு அவனுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்காமல் விடமாட்டோம். இனி இப்படி நிகழாமல் பார்த்துக்கொள்வோம்! என்கிற கோணத்தில் அணுகியிருந்தால், தமிழகமே கூட நின்றிருக்கும்.

அவசரம் அவசரமாக தந்தையும், நீயும் கொடுத்தத் தொடர் பேட்டிகளினாலும், அதில் ஒலித்த உங்கள் தவறானத் தொனியினாலும், நாங்கள் பிராமணர், இந்துக்கள் போன்ற தேவையற்ற விஷயங்களை இதற்குள் கொண்டுவந்ததால் இப்போது தேனீக்கூட்டைக் கலைத்ததுபோல ஆகிவிட்டது. யாரைப் பற்றி எந்த அம்சத்தை இந்த சமூகம் விவாதிக்க வேண்டுமோ, எவனை எல்லோரும் திட்டித் தீர்க்க வேண்டுமோ, அவனை நோக்கி எல்லார் கோபமும் திரும்ப வேண்டுமோ, அதையெல்லாம் வலிய உங்கள் தலைமீது நீங்களே இழுத்துப் போட்டுக்கொண்டீர்கள். தவறு செய்தவன் ஒரு சிற்றறைக்குள் அமைதியாக இருக்கிறான். நீங்கள் ஊரெங்கும் அலைக்கழிக்கப்படுகிறீர்கள்.

இப்போதும், இதை இன்னும் அசிங்கப்படுத்தாமல், அலங்கோலப்படுத்தாமல், தேவையற்ற உயர்மட்ட உதவிகளைத் தேடி வெறித்தனமாக ஓடிக்கொண்டிராமல், கொஞ்சம் நிதானித்து, மக்களிடம் கனிவாக, பண்போடு பேசுங்கள். தவறு எவனுடையதோ, நீங்கள் எதற்கு அவமானப்பட வேண்டும்? அவனிடம் இருந்து எட்ட நின்று அந்தக் குழந்தைகள், பெற்றோர், மக்கள் பக்கம் நின்று சிந்தியுங்கள். உணர்ச்சிவசப்படாமல் இதை எளிமையாகக் கையாளுங்கள்!

இவ்வாறு ஜேமஸ் வசந்தன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
 

More News

ஊரடங்கு நேரத்தில் 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தா செய்த மகத்தான சேவை!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'குக்'கள் மற்றும் கோமாளிகள்

பிக்பாஸ் ஷிவானியின் வேற லெவல் குத்தாட்டம்: வீடியோ வைரல்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி அந்த நிகழ்ச்சியில் யாருடனும் ஒட்டாமல், பேசாமல் இருந்ததாகவும் பாலாஜியுடன் மட்டுமே நெருக்கமாக இருந்ததாகவும்

ஊடகவியலாளர்களை முன்களப்பணியாளர்காளாக அறிவியுங்கள்...! முதல்வருக்கு சீமான் கோரிக்கை..!

கொரோனா காலத்தில்   களப்பணியில் ஈடுபட்டுள்ள, அனைத்து நிலை ஊடகவியலாளர்களையும், எந்த பாகுபாடும் இல்லாமல் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்

சன்னிலியோன் வாங்கிய அபார்ட்மெண்டில் வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார்: எத்தனை கோடி தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் வீடு வாங்கிய அபார்ட்மென்டில் அகில இந்திய சூப்பர் ஸ்டார் மற்றும் பிரபல இயக்குனர் ஒருவரும் வீடு வாங்கி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது 

தனுஷின் 'ஜகமே தந்திரம்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான 'ஜகமே தந்திரம்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜூன் 18-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்