close
Choose your channels

'ஜன கன மன' பாடிய 72 பேர்களுக்கு இருக்கும் ஆச்சரிய ஒற்றுமை: வைரல் வீடியோ

Tuesday, January 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு ஆன 2020ஆம் ஆண்டு வரை ஜனவரி 26ஆம் தேதி பிறந்தவர்களை ஒருங்கிணைத்து இந்தியாவின் தேசிய கீதமான’ஜன கன மன’ என்ற பாடலை பாடிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது

இன்று இந்தியாவின் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வங்காளிகள் 72 பேர்கள் இணைந்து ’ஜனகனமன’ பாடலை ஒரு சாதனையாக பாடியுள்ளனர். இந்த பாடலை பாடியவர்கள் 72 பேர்களும் 1947 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரையிலான ஆண்டுகளில் சரியாக ஜனவரி 26ஆம் தேதி பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கவே கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 26ல் பிறந்த 72 பேர்களும் ஒன்றிணைந்து பாடிய ஜனகனமன பாடலின் வீடியோவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.