இதுவரை 14 விஜய் படங்கள் பொங்கல் ரிலீஸ்.. 'ஜனநாயகன்' 15வது படமா? இன்று அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்து வரும் "ஜனநாயகன்" படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் அதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுவரை தளபதி விஜயின் 14 படங்கள் பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகி, பெரும்பாலானவை சூப்பர் ஹிட் ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த "கோயம்புத்தூர் மாப்பிள்ளை" திரைப்படம் முதல் முறையாக பொங்கல் தினத்தில் வெளியான நிலையில், அதன் பின்னர் "காலமெல்லாம் காத்திருப்பேன்," "கண்ணுக்குள் நிலவு," "பிரண்ட்ஸ்," "திருப்பாச்சி," "ஆதி," "போக்கிரி," "வில்லு," "காவலன்," "நண்பன்," "ஜில்லா," "பைரவா," "மாஸ்டர்," மற்றும் "வாரிசு" ஆகிய 14 படங்கள் பொங்கல் ரிலீஸாகி வெற்றி பெற்றுள்ளன.
இதில் ஓரிரு படங்கள் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் சாதனை படைக்கவில்லை என்றாலும், மற்ற அனைத்தும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், "ஜனநாயகன்" விஜய்யின் 15வது பொங்கல் ரிலீஸ் ஆகுமா என்பதை உறுதியாக அறிவிக்க இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே உள்ளன.
விஜய் ரசிகர்கள் அந்த அறிவிப்பை எதிர்பார்த்து உற்சாகமாக காத்திருக்கின்றனர்!
Indha ...... namakku super collection ma 🔥
— KVN Productions (@KvnProductions) March 24, 2025
Stay Tuned, 3 hours to go!#JanaNayagan #ஜனநாயகன் pic.twitter.com/ZPr2MIHaRM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments