'கூலி' படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிகம்.. 'ஜனநாயகன்' பிசினஸ் தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமைக்கான தொகையை விட ஒரு கோடி ரூபாய் அதிகமாக ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி பிசினஸ் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கூலி' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும், 120 கோடி ரூபாய்க்கு பிசினஸ் பேசப்பட்டிருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் கசிந்தது.
இந்த நிலையில், தற்போது அதே அமேசான் பிரைம் நிறுவனம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை 121 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த இரண்டு தகவல்களும் உறுதி செய்யப்பட்டால், ரஜினியின் படத்தைவிட ஒரு கோடி ரூபாய் அதிகமாக விஜய்யின் படம் ஓடிடி பிசினஸ் செய்துள்ளது என்பதும் உறுதி செய்யப்படும்.
மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை அமேசான் நிறுவனம் வாங்கியிருந்தாலும், எட்டு வாரங்கள் கழித்து மட்டுமே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments