'குட் பேட் அக்லி' படத்தின் பிசினஸில் 'ஜனநாயகன்' தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது ஒரு பக்கம் பிரமோஷன் பணிகள், இன்னொரு பக்கம் வியாபார பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ’குட் பேட் அக்லி’ படத்தின் கர்நாடக மாநில ரிலீஸ் உரிமையை KVN Productions நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தான் விஜய் நடித்து வரும் "ஜனநாயகன்" படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஒரே நேரத்தில் விஜய்யின் படத்தை தயாரித்து வரும் KVN Productions நிறுவனம், அஜித்தின் படத்தின் ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ளது என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் இந்த படத்தை KVN Productions வெளியிடுவதால், மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படம் 2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது.
Happy to collaborate with the prestigious @KvnProductions for the grand Karnataka theatrical release of #GoodBadUgly ♥️
— raahul (@mynameisraahul) March 17, 2025
An @adhikravi sambavam 🔥#Ajithkumar sir @mythriofficial @tseries @LohithNK01 @SUPRITH_87 @gvprakash brother @sureshchandraa sir @trishtrashers mam…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com