ஆரம்பமாகிறது 'ஜனநாயகன்' ஆட்டம். முதல் அப்டேட் நாளை.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு முடிந்ததும் அவர் முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், குறிப்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு தனது தமிழக வெற்றி கழகத்தை தயார்படுத்தவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், மக்களை நேரில் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில், நாளை முதல் அப்டேட் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் KVN Productions அறிவித்துள்ளது.
"நாளை முதல் கவுண்டவுன் ஆரம்பம்" என கூறியுள்ள நிலையில், நாளை ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாக தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் டீசர் வெளியாகலாம் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பே நாளை வெளிவர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கும் நிலையில் மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத் தொகுப்பாளராக பிரதீப் ராகவ், உடை வடிவமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
Fasten your seatbelts, the countdown begins🔥
— KVN Productions (@KvnProductions) March 31, 2025
Big reveal on April 2nd 💥@TheRoute @KvnProductions @BrandAvatar @Jagadishbliss @LohithNK01 @Hem_chandran pic.twitter.com/7yUN7jYNV3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments