மூன்றாம் பிறை' ஸ்ரீதேவிக்கு இணையான கேரக்டர்: பலூன் பட நடிகை பெருமிதம்

  • IndiaGlitz, [Wednesday,August 16 2017]

இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் ஜெய்-அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'பலூன் திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின் மீண்டும் இணைந்து நடித்துள்ள ஜெய்-அஞ்சலி ஜோடி நிஜத்திலும் ஜோடியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஜெய், அஞ்சலி தவிர இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடிகை ஜனனி அய்யர் நடித்துள்ளார். இந்த படத்தில் தனது கேரக்டர் குறித்து ஜனனி அய்யர் கூறியதாவது:

'என்னுடைய கதாபாத்திரம் 1980க்களின் பிண்ணனியில், கொடைக்கானலில் வாழும் ஒரு பெண்ணை பற்றியது. ஜெய்யை காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் "மூன்றாம் பிறை" ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான நடிப்பை சார்ந்து இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார். காலம் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அந்த நடிப்புக்கு ஈடு, இணை ஏது , வரவே முடியாது என்றும் நாங்கள் பேசி கொண்டோம்.ஆயினும் நான் நடிக்கும் போது, ஸ்ரீதேவி மேடம் அவர்களின் நடிப்பை பார்த்து வந்த உந்துதல் என்னை சிறப்பாக நடிக்க வைத்தது எனலாம். என்னை வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் இது என்று சொல்லலாம். ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள் என்று கூறினார்.

'மூன்றாம் பிறை' வெளியாகி 35 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் ஸ்ரீதேவியின் 'விஜி' கதாபாத்திரம் அனைவரின் நெஞ்சிலும் பதிந்துள்ளது. அந்த நடிப்பில் பாதியாவது ஜனனி அய்யர் வெளிப்படுத்தியிருந்தாலே இந்த படம் அவருக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார் பிரபல நடிகை!

ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நேற்றைய நிகழ்ச்சியில் பல பார்வையாளர்கர் பாதியில்  வெளியேறியிருப்பார்கள். அந்த அளவுக்கு சலிப்பு தரும் காட்சிகள் இருந்தது...

மாநில அரசை விமர்சிக்காதது ஏன்? 'தரமணி' இயக்குனர் ராம் விளக்கம்

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த 'தரமணி' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...

பேசும் படம்: வெள்ளத்தில் மூழ்கினாலும் மூழ்காத தேசிய பற்று

இந்திய மக்கள் மொழி, இனம், மதம், ஜாதி போன்ற பலவகைகளில் பிரிந்து இருந்தாலும் தேசிய ஒருமைப்பாடு என்று வரும்போது அனைவரும் ஒன்று கூடுவார்கள் என்பது பல விஷயங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது...

விபத்து நடந்த ரயில் முன் செல்பி எடுத்த மீட்புப்படையினர்களுக்கு தண்டனை

உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் முதல் வயதானவர் வரை அனைவரையும் பிடித்துள்ள ஒரு நோய் 'செல்பி'...

சிவாஜி, கமல் பட பாணியில் கார்த்திக் நரேனின் அடுத்த படம்

தமிழ் திரைப்படங்களில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம் சிவாஜி கணேசனின் 'அந்த நாள்'. அதன் பின்னர் கமல்ஹாசனின் 'குருதிப்புனல்', பேசும்படம்' போன்ற ஒருசில படங்களும் பாடல்கள் இல்லாமல் வெளிவந்தது...