close
Choose your channels
viswasam

'பேட்ட' படம் பார்க்க ஜப்பானிலிருந்து சென்னை வந்த ரஜினி ரசிகர்கள்

Thursday, January 10, 2019 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் தலைவரை திரையில் பார்க்க ரஜினி ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்தனர்.

இந்த நிலையில் 'முத்து படத்திற்கு பின் ரஜினிக்கு ஜப்பானிலும் ரசிகர்கள் குவிந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இன்று வெளியான 'பேட்ட' படத்தை பார்ப்பதற்காக ஒருசில ஜப்பான் ரசிகர்கள் சென்னை வந்திருந்தனர். சென்னை காசி தியேட்டர் முன் அழகு தமிழில் ரஜினி குறித்து பெருமையாக பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சென்னை வந்த ஜப்பான் ரஜினி ரசிகர் ஒருவர் கூறியபோது, 'பேட்ட' படத்தை முதல் நாள் முதல் காட்சி காசி தியேட்டரிலும் இரண்டாவது நாள் ஆல்பர்ட் தியேட்டரிலும் மூன்றாவது நாள் ரோஹினி தியேட்டரிலும் படம் பார்த்துவிட்டு அதன்பின் நாடு திரும்பவுள்ளதாக கூறினார்.