'கில்லி'யை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்.. பதிலுக்கு ஜப்பான் விஜய் ரசிகர்களின் தரமான சம்பவம்..!

  • IndiaGlitz, [Monday,April 22 2024]

தளபதி விஜய் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த ’கில்லி’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக புதிதாக ரிலீசான படங்களுக்கு இணையாக இந்த படத்தின் முதல் நாள் ஓப்பனிங் வசூல் இருந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த வாரம் சனி ஞாயிறு வரை இந்த படத்திற்கு டிக்கெட் புக் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றி ரசிகர்களுக்கு மட்டுமின்றி படத்தின் குழுவினர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ’கில்லி’ படத்தை ஒரு பக்கம் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஜப்பான் நாட்டில் ’பிகில்’ படம் ரிரீலிஸ் செய்யப்பட்டதை அடுத்து அங்குள்ள விஜய் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு திரையரங்கில் ’பிகில்’ படம் திரையிடப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இணையாக ஜப்பான் நாட்டு விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டம் நடத்திய புகைப்படம் இணையத்தில் கசிந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’சர்கார்’ படம் விஜய் பிறந்தநாளன்று ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து இன்னொரு கொண்டாட்டம் காத்திருக்கிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பிரேமலு' ஜோடி மாறிவிட்டதா? ஆளை மாற்றிய மம்தா பாஜூ.. செம்ம ரொமான்ஸ் வீடியோ..!

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'பிரேமலு' தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது

வாடிவாசலுக்கு முன்பே வெற்றிமாறனின் இன்னொரு படம்.. ஹீரோ இந்த பிரபலம் தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்குவார் என்று

'ஜெய்ஹோ' பாடலை ஏஆர்  ரஹ்மான்  கம்போஸ் செய்யவில்லையா? பிரபல இயக்குனர் பேட்டியால் பரபரப்பு..!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற படத்திற்காக கம்போஸ் செய்த 'ஜெய் ஹோ' என்ற பாடல் ஆஸ்கார் விருதை வென்றது என்பதும் இதன் மூலம் தான் ஏ ஆர் ரகுமான் உலக புகழ் பெற்றார் என்பது தெரிந்தது.

நான் அதை செய்வதில்லை.. அதனால் எனக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை: மனம் திறந்த ப்ரீனிதி சோப்ரா..!

நடிகை ப்ரீனிதி சோப்ரா கடந்த 13 ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் இருக்கும் நிலையில் ஒரு சில படங்கள் மட்டுமே அவர் நடித்து இருக்கும் நிலையில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு என்ன காரணம் எ

வெங்கட்பிரபுவின் குறும்படம் தான் விஜய்யின் 'கோட்' படமா? இவ்வளவு ஒற்றுமை இருக்கிறதே..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'லோகம்' என்ற குறும்படம் தான் 'கோட்' படத்தின் கதை என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.