பணப்பெட்டிக்கு ஆசைப்பட்ட போட்டியாளர் வெளியேற்றம்.. கடைசி நேரத்தில் சுதாரித்த சவுந்தர்யா..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், மற்ற சீசன்களில் இல்லாத வகையில் இந்த சீசன்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி விட்டால் பணமும் கிடைக்கும், போட்டியிலும் தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே ராயன், முத்துக்குமார் ஆகியோர் பணப்பெட்டியை எடுத்த நிலையில், பவித்ராவும் மிகவும் சூப்பராக விளையாடி 2 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துவிட்டார்.
இந்த நிலையில், 8 லட்ச ரூபாய் கொண்ட பணப்பெட்டி வைக்கப்பட்ட நிலையில் அதற்கு 35 வினாடிகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஜாக்குலின் 37 வினாடிகள் எடுத்துக் கொண்டதால், பிக் பாஸ் வீட்டின் கதவுகள் மூடப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் டாப் 5 இடங்களில் ஒருவராக ஜாக்குலின் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், சௌந்தர்யா பணப்பெட்டியை எடுப்பதற்காக வேகமாக ஓடிய நிலையில், ஒரு கட்டத்தில் முடியாது என்று தெரிந்தவுடன் பணப்பெட்டியை எடுக்காமல் அவர் திரும்பி வந்துவிட்டார். அவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வந்ததால், அவர் போட்டியில் நீடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தத்தில், இந்த டாஸ்க்கில் பவித்ரா மட்டுமே பணப்பெட்டியை வென்ற பெண் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Abouttt TURN!
— Athiban (@athiban43481241) January 16, 2025
Hahaha .. #Soundarya! 🤣#BiggBosstamil8 #BiggBoss8Tamil #BiggBossTamilSeason8 #BiggBossSeason8Tamil pic.twitter.com/1J9QoUWpP7
#Day102 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) January 16, 2025
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/fDJEeqb7lf
#Day102 #Promo4 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) January 16, 2025
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/AqWOtXZ1r4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com