ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் படப்பிடிப்பு.. அசத்தலான ஒரு நிமிட வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷான் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. மேலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் தமன் இசையில், பிரவீன் படத்தொகுப்பில் உருவாகி வரும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த நிலையில் இன்று சந்தீப் கிஷானின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில், சந்தீப் கிஷானிடம் ஜேசன் சஞ்சய் காட்சிகளை விளக்குவது உள்ளிட்ட பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு நிமிடம் நீளமான இந்த மேக்கிங் வீடியோவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் காணப்படுவதால், இது ஒரு ஆக்ஷன் பிரியர்களுக்கான படம் என உறுதி செய்யப்படுகிறது.
லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம், 2025 ஆம் ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Happy Birthday to the dynamic @sundeepkishan! 🎉 Your unique style and passion for cinema shine through in every role. Wishing you a year ahead filled with blockbuster hits and endless joy! 💫 @official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan… pic.twitter.com/owugIO0y9Z
— Lyca Productions (@LycaProductions) May 7, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments