காதலி என்பவர் எப்போதும் காதலி தான், ப்ரெண்ட் என சொல்வது போங்காட்டம்: 'தீராக்காதல்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,May 10 2023]

ஜெய் நடிப்பில் உருவான ‘தீராக்காதல்’ என்ற திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னாள் காதலர்களாக இருக்கும் நிலையில் தற்போது ஜெய் வேறொரு பெண்ணை திருமணம் செய்து குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராஜேஷை ஜெய் சந்திப்பதால் ஏற்படும் பழைய ஞாபகங்கள் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை ஆகியவற்றை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கும் கதை தான் ‘தீராக்காதல்’

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்வேதா உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கி உள்ளார். சித்து குமார் இசையில் ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் காதலர்களின் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நமக்கு பிடிச்சவங்களோட ஒரு இடத்துல இருக்கும் போது அந்த இடம் இன்னும் ரொம்ப அழகா இருக்கு.

முன்னெல்லாம் லவ்வர பார்த்த தான் பிரண்ட்ஸை கழட்டிவிட்டு விடுவீங்க, இப்ப எக்ஸ் லவ்வரை பார்த்தா கூட கழட்டி விட்டு விடுவீங்களா.

காதலி என்பவர் எப்போதும் காதலி தான், அவள் பிரண்டு மாதிரி என்று சொல்வதெல்லாம் போங்காட்டம்.

போன்ற வசனங்கள் டிரைலரில் இருக்கும் நிலையில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

வேறலெவலா மாறப்போகும் டிவிட்டர் கணக்கு? கட்டணம் இருக்குமா?

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே அதன் சேவையில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன.

3 DNA களுடன் பிறந்த அதிசய குழந்தை… இதுவும் சாத்தியமா?

பிறக்கும் குழந்தைகள் பொதுவாக தாய், தந்தை இருவரின் மரபணுவைக் கொண்டு பிறக்கும். ஆனால் 3 மரபணுக்களைக் கொண்டு இங்கிலாந்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன்- பெள்ளியை சந்தித்த தோனி… என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியை ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‘ ஆவணப்படத்தில் நடித்து ஆஸ்கர் வி

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’: ஒரே நேரத்தில் வெளியான இரண்டு சூப்பர் அப்டேட்..!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

பார்க், பீச், சினிமா தியேட்டர்.. இப்ப மெட்ரோ ரயிலிலும்.. வைரலாகும் வீடியோ..!

காதலர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொள்வதும் மடியில் படுத்து ரொமான்ஸ் செய்வதும் பார்க்,