ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்துவிட்டார்: திவாகரன் திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,January 17 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் தேதி டிசம்பர் 5ஆம் தேதி காலமானார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் அவரது மரணம் குறித்து பெரும் சந்தேகம் எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஜெயலலிதாவின் மரணம் குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா டிசம்பர் 4, 2016 அன்று மாலை 5.15 மணிக்கு உயிரிழந்துவிட்டார் என்றும் அப்போலோ நிர்வாகம் தனது மருத்துவமனைக்கான பாதுகாப்பை உறுதி செய்த பிறகே அவர் இறப்பை தாமதப்படுத்தி அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

திவாகரனின் இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒரு மாநிலத்தின் முதல்வர் மரணத்தை கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் நாட்டு மக்களுக்கு மறைத்திருந்த இந்த  விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல்ஹாசனுடன் அரசியல் கூட்டணி குறித்து ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தமிழக அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும்: வைரமுத்து இரங்கல்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ்.படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு என்ற மாணவர் இன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது சடலம் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்சியை விட்டு நீக்கிய கார் டிரைவருக்காக தர்ணா செய்த தீபா

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த ஆண்டு எம்ஜிஆர் அம்மா பேரவை என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியில் அவருடைய கணவர் மாதவனுக்கு இருந்த மரியாதையைவிட அவரது கார் டிரைவரான ராஜாவுக்கு இருந்தது

ஒரே நேரத்தில் மூன்று இரண்டாம் பாக படங்களில் பணிபுரியும் ஸ்டண்ட் சில்வா

கோலிவுட் திரையுலகில் தற்போது இரண்டாம் பாக சீசன் கொடிகட்டி பறக்கின்றது. 2.0, விஸ்வரூபம் 2 முதல் மாரி 2 வரை சுமார் பத்து இரண்டாம் பாக திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

வேலைக்காரனை சந்தித்த வேலாயுதம் - காரணம் என்ன ?

கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்'. இந்த படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன், மோகன்ராஜா ஆகியோர்களின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.